டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பிரதமர் மோடி, அமித்ஷா புறக்கணிப்பு எதிரொலி ஒன்றிய அரசு மீது ஒபிஎஸ் திடீர் தாக்கு: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்?
* அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தாரைவார்ப்பு: பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில், 550 அரசுப் பள்ளிகளை பெருமுதலாளி நிறுவன மேற்பார்வையில் நடத்த முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மொழியின் பெயரில் வேற்றுமையை உருவாக் காதீர்கள், ஆளும் பாஜக அரசுக்கு வேண்டுகோள் – தலையங்கம்.
* பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
* மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் ஆக.19ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டிரம்ப் பொய் சொல்கிறார் என்று இந்த அவையில் சொல்ல பிரதமருக்கு தைரியம் இருக்க வேண்டும்’: அரசாங்க தந்திரோபாயங்கள், போர் நிறுத்தம் குறித்து மோடி அரசு மீது ராகுல் சரமாரி கேள்வி. இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் “கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில்” அனுப்பப்பட்டதாக கூறுகிறார், எனவே “விமானங்கள் விழுந்ததில்” ஆச்சரியமில்லை என கண்டனம்.
* ‘பகல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து, கனிமொழி, “விஸ்வ குரு” தனது சொந்த நாட்டு மக்களை தோல்வியடையச் செய்தார். “நாடாளுமன்ற எம்.பி. குழுக்கள் ஏன் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது, ஏன் தாக்குதல்கள் நடக்க வேண்டியிருந்தது… சில வாய்ப்புகள் கொண்டாடப்பட வேண்டியவை அல்ல, துக்கப்பட வேண்டியவை” என மக்களவையில் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக ஆளும் ம.பி.யில் பாலியல் வன்கொடுமை; கொலை: 2022 மற்றும் 2024 க்கு இடையில் மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 7,418 பட்டியல் ஜாதி (எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடி (எஸ்டி) பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், 558 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், 338 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் மாநில அரசு சட்டமன்றத்தில் பகிர்ந்துகொண்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு டில்லியில் தர்ணா: தெலங்கானா அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக டில்லியில் அமைச்சர்கள் முகாம். மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை டெல்லி சென்று மசோதாக்களுக்கு ஒப்புதல் கோருவது மட்டுமல்லாமல் போராட்டங்களை ஏற்பாடு செய்யவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தி டெலிகிராப்:
* ஒடிசா பள்ளிகளுக்கு காவி அடையாள அட்டைகள்: நகரப் பேருந்துகளை காவி நிறத்தில் மீண்டும் பூசி, அரசு நடத்தும் சேவையின் பெயரை மாற்றிய பிறகு, ஒடிசாவில் உள்ள மோகன் சரண் மாஜி அரசு இப்போது பள்ளி அடையாள அட்டைகளில் கவனம் செலுத்தியுள்ளது. 2025–2026 கல்வியாண்டிலிருந்து, தொடக்கப் பள்ளி மாணவர்கள் காவி அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வார்கள். மஜ்ஹி தலைமையிலான பாஜக அரசு வகுப்பறைகளுக்கு ‘வண்ண அரசியலை’ கொண்டு வருவதாக விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ராணுவ நடவடிக்கைகளுக்கு ‘ஹிந்து பெயர்கள்’ ஏன்? மேனாள் மகாராட்டிரா முதலமைச்சர் அசோக் சவான் விமர்சனம்: அனைத்து நடவடிக்கைகளிலும் ஹிந்துத்துவாவை புகுத்தி சமூகத்தை மத ரீதியாக உருவப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா