சென்னை, ஜூன் 13 பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளரும் பிரபல ரவுடியுமான மிண்ட் ரவி என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கொரட்டூரில் நிலம் விற்பனை செய்த உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி பணத்தை பறித்து கொலை மிரட்டல் கொடுத்த புகாரில் மிண்ட் ரவி மற்றும் ரமேஷ் என்பரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். சிறையில் இருந்தும் அவர் மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டு இருந்தார். இது தொடர்பாக புகார் பெறப்பட்டு விசாரணையில் உறுதியானது. இதனை அடுத்து பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது..