சென்னை, ஜூலை.29-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.7.2025) வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் துன்புறுத்தப் பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இத்தகைய கும்பல் வன்முறையும், அரசு அதுகுறித்து அமைதி காப்பதும் மத பயங்கரவாதத்தின் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் சிறுபான்மையின மக்கள் மாண்போடும், சம உரிமைகளோடும் நடத்தப்பட வேண்டும். மாறாக அவர்களை அச்சுறுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.