சென்னை, ஜூலை28- சென்னை-வண்டலூர் தலைநகர் தமிழ்ச் சங்கத் தில் தமிழ்ச் செம்மொழிப் போராளி பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் படத்திறப்பும் – இரங்கலும் 27.7.2025 அன்று காலை 10 மணி அளவில் பொதுச் செயலாளர் பாவலர் ம.கணபதி தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியர் முகிலை இராச பாண்டியன் வர வேற்புரையாற்றினார். செம்மொழிப் போராளி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படத்தை டில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் திறந்து வைத்து இரங்கல் உரையில், வா.மு.சேதுராமன் அவர்கள் ஒரு தமிழின போராளி என்றும் டில்லியில் மூன்று போராட்டங்களை செம்மொழிக்காகவும், இலங்கைக்கு ஒன்றிய அரசாங்கம் நிதி உதவி தரக்கூடாது என்றும் மற்றும் திருக்குறள் தேசிய மயமாக்க வேண் டும் என்ற மூன்று போராட் டங்களையும் அவருடன் நான் இணைந்து நடத்தி யுள்ளேன். மேலும் இந்த மூன்று பதிவுகளையும் ‘செம்மொழி போர்க்களம்ங என்ற புத்தகத்தில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் பதிவு செய்துள்ளதை நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியில் பெருங் கவிக்கோவின் புதல்வர்கள் கவிவாணர் வா.மு.சே. திருவள்ளுவன், முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய மேனாள் தலைவர் சேம நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 2000ஆம் ஆண்டில் புது டில்லியில் செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த டில்லி தமிழ்ச் சங்கத்தில் மறுபடியும் திருக்குறள் மாநாடும், திருக்குறள் தேசிய நூல் என்ற கோரிக் கையை வலியுறுத்தி போராட்டமும் நடத்த வேண்டும் என்று தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டில்லியில் 2026இல் திருக்குறள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்வதாக முகுந்தன் குறிப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் குமார், நக்கீரன் தமிழ் சங்கத் தலைவர் பாஸ்கர் மற்றும் கனடா விஜயராணி, கவிஞர் திருவடி பாண் டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கவி ஞர்கள் பலரும் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.