நேற்று (27.7.2025) மாலை மருத்துவமனையிலிருந்து நலமுடன் இல்லம் திரும்பிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இரவு 7.15 மணிக்கு, தொலைப்பேசி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தொடர்பு கொண்டு, நலம் விசாரித்தார்.
இன்று (28.7.2025) நடக்கவிருக்கும் அறுவைச் சிகிச்சை பற்றிக் கேட்டறிந்து, உடல் நலம் பெற ஆசிரியருக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சர் பற்றி ஆசிரியர் எழுதிய அறிக்கையையும் (27.7.2025) படித்ததாகக் கூறினார்.
மருத்துவமனையிலிருந்து நலமுடன் முதலமைச்சர் இல்லம் திரும்பியதற்கு வாழ்த்துக் கூறியதுடன், மருத்துவமனையிலிருந்து மக்கள் பணியாற்றியதுபோலவே, சில நாட்கள் வீட்டிலிருந்தே பணி யாற்றுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தினார் ஆசிரியர் அவர்கள்.