தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடா? வதந்திகளை நம்ப வேண்டாம்! தமிழ்நாடு அரசு

1 Min Read

சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தனது சமூக தலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது.

இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இது கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே பரப்பப்படுகிறது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோவில், மசூதி மற்றும் தேவாலயம் உள்ளிட்ட பொது வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.13 மானியம் அளிக்கிறது. எனவே, வதந்தியை பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *