டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*சிறப்பு தீவிர திருத்தம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது: தங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்குவதா? பீகாரில் நடப்பது சீர்திருத்தம் அல்ல, தில்லுமுல்லு, நெருப்புடன் விளையாடாதீர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
* ஓ.பி.சி. பிரச்சினையை உணராமல் போனது காங்கிரசும் நானும் செய்த தவறு, ராகுல் மனம் திறந்த பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதியின் இரண்டாம் பாகம், ராகுல் பாராட்டு. பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக எதுவும் செய்ய மாட்டார் என கண்டனம்.
* நாட்டில் 90 சதவகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை. மக்கள் தொகையில் 90 சதவிகித தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மை மக்கள் ஆவர் என ராகுல் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘காலியாக உள்ள’ பல்கலைக்கழக ஒதுக்கீட்டு ஆசிரியர் பதவிகள் குறித்து ராகுல் காட்டம்; “மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வழங்கிய தரவு ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் வாய்ப்பை மறுக்கவும் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட மனுவாதத்தின் தன்மைக்கும் சான்றாகும்.” என ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவு: 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் தகவல்
தி டெலிகிராப்:
* அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக முஸ்லிம்களை குறிவைத்து சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக அமெரிக்க குழு குற்றம் சாட்டியுள்ளது. மே 7 முதல் ஜூன் 15 வரை குறைந்தது 1,500 முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர், இதில் மியான்மரைச் சேர்ந்த 100 ரோஹிங்கியா அகதிகள் அடங்குவர் என்று HRW, எல்லைக் காவல்படை வங்கதேச அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தியா எந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களையும் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
* ஓபிசி பிரிவினரின் பிரச்சினைகளை நீண்ட காலத்திற்கு முன்பே கையில் எடுத்திருக்க வேண்டும் என்று தான் உணர்ந்ததாக கூறினார். இருப்பினும், இப்போது அதை இரட்டிப்பு வேகத்திலும் இரட்டிப்பு பலத்திலும் மிகச் சிறந்த முறையில் உறுதி செய்வதாக ராகுல் உறுதி.
– குடந்தை கருணா