சென்னை, ஜூலை.26-எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் நெல்லை மாணவர் சூர்ய நாராய ணன் முதல் இடம் பிடித் துள்ளார். முதல்கட்ட கலந்தாய்வு வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.
பொது மருத்துவம் மற்றும் பில் மருத்துவர்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி அரசு ஒதுக்கீடு இடங்களில் 6 ஆயிரத்து 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதே போல், பி.டி.எஸ். படிப்பில் 1,583 அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. அரசு பள்ளி மாண வர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 495 எம்.பி.பி. எஸ் இடங்களும், 119 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.
இதற்கான, 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண் ணப்ப பதிவு கடந்த மாதம் (ஜூன்) 6ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. வ அரசு ஒதுக்கீடு மற்றும் நிர் வாக ஒதுக்கீடு இடங்களுக்கு மொத்தம் 72 ஆயிரத்து 472 மாணவ, மாணவிகள் விண் ணப்பித்தனர். கடந்த ஆண்டைகாட்டிலும், 29 ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் அதிகம்.
தரவரிசை பட்டியல்
இந்தநிலையில், எம்.பி.பி. எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று (25.7.2025) நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி.பி. எஸ்.பி.டி.எஸ்.படிப்புக்கான அரசு ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சத் வீத உள் ஒதுக்கீடு மற்றும் தனி யார் மருத்துவக்கல்லூரி நிர் வாக ஒதுக்கீடு கலந்தாய்வுக் கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை முதன்மை செயலா ளர் செந்தில்குமார், மருத்து வக்கல்வி இயக்குநர் தேரணி ராஜன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு ஒதுக்கீடை பொறுத் தவரையில், விண்ணப்பித்த வர்களில் 39 ஆயிரத்து 853 மாணவ, மாணவிகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியி டப்பட்டது. பட்டியலில் 1) சூர்யநாராயணன் (நெல்லை), 2) அபினீத் நாகராஜ் (சேலம்), 3) ஹருத்திக் விஜயராஜா (திருப்பூர்), 4) ராகேஷ் (தர்ம புரி),5) பிரஞன் ஸ்ரீவாரி (செங் கல்பட்டு), 6) நிதின்பாபு (விரு துநகர்), 7) கயிலேஷ் கிரேன்கு (கள்ளக்குறிச்சி), 8) நிதின் கார்த்திக் (சென்னை), 9) பிரக தீஸ் சந்திரசேகர் (தர்மபுரி), 10) பொன் ஷாரினி (தேனி) ஆகி யோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
7.5 சதவீத ஒதுக்கீட்டில், 4 ஆயிரத்து 62 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியி டப்பட்டது. பட்டியலில் 1) திருமூர்த்தி (கள்ளக்குறிச்சி), 2)சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), 3) மதுமிதா (கள்ளக்குறிச்சி), 4) மெய்யரசி (நாமக்கல்), 5) மோனிகா (திருவள்ளூர்), 6) செந்தில்வேல்குமரன் (கரூர்), 7) நிர்மல்ராஜ் (சேலம்), 8) நிதீஷ் (கிருஷ்ணகிரி), 9) ஜெக தீஷ் (தர்மபுரி), 10) நிர்மல் (சேலம்) ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
கலந்தாய்வு
மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு வரு கிற 30ஆம் தேதி தொடங்கு கிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், மேனாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக் கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு ஆகியவை நேரடி கலந்தாய்வு முறையில் வருகிற 30ஆம் தேதி தொடங்கிறது. அதேபோல, பொதுப்பிரிவு அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 10ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
மருந்தாளுநர் மற்றும் செவிலியர் தரவரிசை
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில், பி.எஸ்சி. நாசிங், பி.பார்ம் உள்பட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப் புகளில் 3 ஆயிரத்து 256 உள்ளன. தனியார் கல்லூரிகளில், 20 3 ஆயிரத்து 26 அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. அதேபோல், ‘பார்ம் டி’ படிப்பை பொறுத்தவரையில் தனியார் கல்லூரி களில் 6 ஆண்டு படிப்புக்கு 723 இடங்களும், 3 ஆண்டு படிப் புக்கு 61 இடங்களும் உள்ளன. செவிலியர் பட்டய படிப்பில் அரசு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 80 இடங்கள் உள்ளன. இதற்கான 2025-2026ஆம் கல்வியாண்டு கலந்தாய்வுக்கான தரவ ரிசை பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.