லுங்கி என்பது வெறும் ஆடை மட்டுமல்ல – கலாச்சாரத்தின் அங்கம்-சரவணா இரா

3 Min Read

அண்மையில் மருத்துவமனையில் லுங்கி அணிந்தபடி அரசுப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் இணையத்தில் வெளியானது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்துவந்தன. லுங்கி என்பது எளிய மக்களின் இயல்பான உடை. திராவிட இயக்கத் தலைவர்களில் பெரியார் இறுதிவரை பொதுவெளியில் லுங்கி பயன்படுத்தி வந்தவர். அண்ணா, கலைஞர் போன்றோர் லுங்கியுடன் உள்ள படங்கள் பொது வெளியில் எப்போதும் காணக்கிடைக்கும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஆனால் லுங்கி இன்று பொதுவெளிகளில் பெரிதும் அனுமதிக்கப்படுவதில்லை.

லுங்கி என்றாலே தீண்டாமை என்று ஆகிவிட்டது.

லுங்கி அணிந்து கோவிலுக்குள் வரவேண்டாம்,

லுங்கி அணிந்து பள்ளிக்குழந்தைகளை விடுவதற்கு வரவேண்டாம்,

லுங்கி அணிந்து மால்களுக்குள் வரவேண்டாம்.

கட்டுரை, ஞாயிறு மலர்

லுங்கி அணிந்து காலை நடைப்பயணம் மேற்கொள்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதால் டிராக் சூட்டிற்கு மாறியவர்கள் அதிகம்

லுங்கி அணிந்து கடைவீதிக்குச் சென்றால் கிராமத்தானைப் போல் பார்க்கும் காய்கறிக்கடை வியாபாரிகள்.

லுங்கி அணிந்து துணிக்கடைக்குச் சென்றால் சாம்பிராணி பாத்திரம் எங்கே என்று கிண்டலடிக்கும் துணிக்கடை தொழிலாளி.

ஏன் லுங்கியின் பின்னால் பழித்துக்கொண்டு ஓடுகிறது ஒரு கூட்டம்?

எதற்கு லுங்கியைக் கண்டாலே பதறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு மேலே மேலே உள்ளது. இதற்குப் பின்னால் சமூக உளவியல் காரணங்கள் இருக்கின்றன.

லுங்கி, இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக அணியப்படும் ஒரு பாரம்பரிய ஆடை. ஆண்களால் அதிகம் அணியப்படும் இதனை, தமிழ்நாட்டில் கைலி, நெல்லை மாவட்டத்தில் சாரம் என்று அழைப்பார்கள். மலாய் மொழியில் சாரோங் என அழைக்கப்படுகிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

எளிமையும், அனுகூலமுமான உடையாகவும், வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாகவும் இருப்பதால், இது பல நூற்றாண்டுகளாக மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால், லுங்கி வெறும் ஆடை மட்டுமல்ல; அது ஒரு சமூக அடையாளமாகவும், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது.

தென் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் வாழ்ந்த மக்கள் அதிகம் லுங்கியைப் பயன்படுத்தினார்கள். அதுவே ஆங்கிலேயர்களின் காலத்தில் தென் இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது. மேற்குவங்கம் அசாம். பீகார், மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வணிகப் பயணங்கள் மூலம் இது மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியது. ஒவ்வொரு பகுதியிலும், அதன் நெசவு முறை, வண்ணம், வடிவமைப்பு ஆகியவற்றில் தனித்துவமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பாரம்பரியமாக, லுங்கி உழைக்கும் வர்க்கத்தினரின் உடையாகவே பார்க்கப்பட்டது. கிராமப்புறங்களில் விவசாயிகளாலும், மீனவர்களாலும், கட்டுமானத் தொழிலாளர்களாலும் இது பெரும்பாலும் அணியப்பட்டது. ஆனால், காலப்போக்கில், அதன் எளிமை, வசதி மற்றும் கலாச்சார அடையாளம் காரணமாக நகர்ப்புறங்களிலும் இது பரவத் தொடங்கியது.

வீட்டில் அணியும் உடையாக, லுங்கி அணியப்படுகிறது. அண்மைக் காலமாக, இளைஞர்கள் மத்தியில் லுங்கியை ஒரு ஃபேஷன் உடையாகவும் அணியும் போக்கு அதிகரித்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில், மேல் வர்க்கத்தினர் வேட்டி அல்லது பட்டு வேட்டிகளை அணியும்போது, லுங்கி என்பது கீழ் வர்க்கத்தினரின் ஆடையாகப் பார்க்கப்பட்டது. எந்த ஓர் ஆடையையும் அதன் பயன்பாட்டையும், வசதியையும் வைத்தே மதிப்பிட வேண்டும் என்றும், ஒருவரின் ஆடையை வைத்து அவர் யார் என்பதைத் தீர்மானிக்கக் கூடாது ஜாதி, மதம், பாலினம் போன்ற அடையாளங்களை உடைத்தெறிய லுங்கி ஒரு கருவியாக பயன்படுகிறது.

லுங்கி, வெறும் ஒரு துண்டுத் துணி அல்ல.  ஆடை என்பது சமூகப் பாகுபாடுகளைத் தாண்டி, தனிமனித சுதந்திரத்தையும், செயல்பாட்டையும் மய்யமாகக் கொள்ள வேண்டும்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பையாபுரத்தில் பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டுவதற்காக அந்த ஊரில் நெய்த லுங்கியை கொழும்பு, ரங்கூன், சியாம், கடாரம், எடுத்துச்சென்று விற்று அதன் மூலம் ஈட்டிய பணத்தில் பாப்பையாபுரம் துவக்கப்பள்ளியை 1938-ஆம் ஆண்டு கட்டினார்கள்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *