சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் ராமநாயக்கன்பாளயம் கிராமத்திற்கு வெளியே மலையடிவாரத்தில் வசிக்கும் சி. கண்ணய்யன் (வயது 70), கிருஷ்ணன் (வயது 67) ஆகிய இரண்டு பேரும் தங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கேயே வீடுகட்டி வசிக்கின்றனர்.
விவசாயிகள் இருவருக்கும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்ட உறையில், பட்டியலினத்தவர்களுக்கான இவர்களது ஜாதி குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.