ஜெயங்கொண்டம், ஜூலை 25- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி மேலணிக்குழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 24.07.2025 அன்று நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வளையப்பந்து போட்டியில் பெண்கள் 17 வயதிற்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், ஆண்கள் 14 வயதிற்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இதில் முதலிடம் பிடித்த அணி மாவட்ட போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.
போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரைப் பள்ளி தாளாளர் முதல்வர் R.கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர்கள் வாழ்த்தினர்.