‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த அ.மனோகரன் நேற்று காலை (24.7.2025) உடல் நலக் குறைவால் மறைவுற்றார். அவருடைய உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ‘விடுதலை’ செய்திப் பிரிவு – பெரியார் திடல் பணித் தோழர்கள் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) பொதுச் செயலாளர் வை.மணிமாறன், பத்திரிகையாளர் முத்துக்குமார் ஆகியோரும் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். மருத்துவமனையிலிருந்த ஆசிரியர் கி.வீரமணி, அ.மனோகரன் மறைவுச் செய்தியறிந்து ‘மிகவும் துயரமானது’ என்று குறிப்பிட்டு தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்தார். (ஓமாந்துரார் மருத்துவ வளாகம் (மார்ச்சுவரி), 24.7.2025)
பத்திரிகையாளர் மறைந்த அ.மனோகரன் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் மாலை வைத்து மரியாதை

Leave a Comment