மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய மூத்த திராவிட இயக்கத் தோழரும், தொ.மு.ச. பொதுச் செயலாளருமான தோழர் சண்முகம் அவர்களும், துடிப்புமிக்க இளந்தலைமுறையின் அடையாளமாக இருக்கும் பெரியாரிஸ்ட் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களும் தங்களின் மாநிலங்களவைப் பொறுப்பைத் திறம்பட முடித்திருக்கிறார்கள்.
குறைந்த காலமே வாய்ப்பு கிடைத்தாலும், அதில் திராவிட இயக்க உணர்வுடன் நாடாளுமன்றத் தில் முழங்கியவர், ஊக்கத்துடன் செயலாற்றியவர் புதுகை எம்.எம்.அப்துல்லா ஆவார்கள். தந்தை பெரியார் குறித்து உரை யாற்றி, அனைவரின் கவனத்தையும், பா.ஜ.க.வினரின் எதிர்ப்பையும் மகிழ்வுடன் ஏற்றவர் ஆவார். அவரே சொல்லியிருப்பதைப் போல, நாடாளுமன்றப் பணி முடிந்தாலும், சமூகநீதிக்கான பணியில் தொடர்ந்து ஈடுபடக் கூடியவர். இன்னும் ஏராளமாகப் பணியாற்ற வேண்டியவர்.
அருமைத் தோழர், தொ.மு.ச. பொதுச் செயலாளர் சாக்கோட்டை சுயமரியாதை வீரர் சண்முகம் அவர்கள் தொழிலாளர் களின் உரிமைக் காக முழங்கும் திராவிட இயக் கத்தின் குரலை நாடாளுமன்றத் தில் பதிவு செய்து தன் கடமையை ஆற்றியிருக்கிறார். தொழிலாளர் வர்க்கத்தின் மேன்மைக்காக அவருடைய பணி என்றும் தொட ரும்.
இரண்டாம் முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அவர்கள், சமூகநீதியை நிலை நாட்ட நீதிமன்றத்தில் வாதாடுபவர். நாடாளுமன்றத்தில் பேராடுபவர். மிகச் சிறப்பாக வகையில் பயன்படுத்தி வருபவர். அவர் பணி தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெறப் போராடுவார் என்பது அய்யத்திற்கிடமில்லாததாகும்.
அரிதினும் அரிதாகவே, இஸ்லாமிய மகளிர் நாடாளுமன்றத் திற்குச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. திராவிட இயக்கம் எல்லா வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில், சிந்தனையிலும் திராவிட இயக்க உணர்விலும் உறுதியானவரான கவிஞர் சல்மா (ராஜாத்தி) அவர்கள் மாநிலங்கள வைக்குச் செல்லவிருக் கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகக் களப் பணியாளரான சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தோழர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்கள் ஆழ்ந்த கொள்கை உணர் வாளர். இவர்கள் நாடாளுமன்றத் தின் மாநிலங் களவையில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பதிவு செய்து, ‘உறவுக்குக் கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற தி.மு.க.வின் உறுதியுடன் திறம்பட செயலாற்றுவார்கள் என்பதில் நமக்கு முழு நம்பிக்கை உண்டு.
மக்கள் நீதி மய்யத்தின் தலை வரும், சீரிய பகுத்தறிவாளருமான கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் தனித்த சிந்தனையாளர். கலைத்துறையில் அவருடைய ஆற்றலும், சிந்தனையும் பயன்பட்டது போல், நாட்டுக் கும் அரசியல் துறையில் பயன்படும் ஓர் அரிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேராதரவு காரண மாகக் கிடைத்துள்ளது. நாடாளு மன்றத்திலும் அவர் சிறப்புடன் முத்திரையால் பதிய வைப்பார்.
அனைவரின் பொதுத் தொண்டு சிறக்க, சமூகநீதிக்கும், ஜனநாயகத்திற்கும், மதச்சார் பின்மைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமாய் வாழ்த் துகிறோம். வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.7.2025