பக்தர்கள் பலி தொடர்கதையா? பாதயாத்திரை கூட்டத்தில் வாகனம் புகுந்து இரண்டு பெண் பக்தர்கள் பலி ‘கடவுள் காப்பார்’ என்று நம்புபவர்கள் சிந்திக்கட்டும்!

1 Min Read

ராமநாதபுரம், ஜூலை 25- பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.

பாதயாத்திரை சென்ற பெண்கள்

‘ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி சாந்தி (வயது 50). அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய மனைவி புவனேசுவரி(40). 23.7.2025 அன்று மாலையில் அப்பகுதியை சேர்ந்த 18 பெண்கள் திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட் டனர்.நேற்று அதிகாலையில் இவர்கள் உப்பூரை அடுத்த நாகனேந்தல் விலக்கு ரோடு அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பெண் பக்தர்கள் குழு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த சம்பவத்தில் சாந்தி, புவனேசுவரி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம் பவ இடத்திலேயே பரிதாப மாக பலியாகினர். மேலும் முருகன் என்பவருடைய மனைவி நாகஜோதி (45) படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் மற்றபெண்கள் அலறினர்.   பின்னர் நாகஜோதியை பிறகு தீவிரச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *