மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சான்றிதழை மறுப்பதா? ரயில்வேத்துறையின் செயல்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை அறிவிப்பு

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூன்15 – மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திடும் துறை அளித்துள்ள சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது, மாறாக ரயில்வே அளித்துள்ள சான்றிதழ் தான் தேவை என்று ரயில்வே வெளியிட்டுள்ள சுற்றறிக் கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படும் என்று மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரயிலில் மாற்றுத் திறனாளிகள் சலுகைகள் பெறுவதற்கு ரயில்வே அளித்திடும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும் என்று ரயில்வேயின் சார்பில் சுற்ற றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை எதிர்த்து மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனை டில்லி  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது  தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செய லாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணம் செய்யும்போது சலுகை களைப் பெற்றுக் கொள்ள ரயில்வே அளித்திடும் அடையாள அட் டையை வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட் டிருக்கிறது.

ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிக ளுக்கு அதிகாரம் அளித்திடும் துறை (Department  for Empowerment of Persons with  Disabilities) வழங்கியுள்ள நிகரற்ற மாற் றுத் திறனாளிகள் அடையாள அட்டையை  (UDIDF-Unique Disability Identity Card)யை  ரயில்வே துறை  கண்டு கொள்ள வில்லை.

இதற்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை டில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்திடும் துறை வழங்கியுள்ள அடையாள அட் டையை மட்டுமே,  அனைத்துத் துறைகளும் ஏற்றுக் கொள்வது போல்   ரயில் வேயும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கோரியது.

ஆயினும் உயர்நீதிமன்றம் சமீ பத்தில் அளித்திட்ட தீர்ப்புரையில் ஒன்றிய அரசாங்கத்தின் ஊனமுற் றோருக்கு அதிகாரம் அளித்திடும் துறை வழங்கியுள்ள அடையாள அட்டையை ஏற்றுக்கொண்டுள்ள அதே சமயத்தில், ரயில்வே அளித் திடும் அடையாள அட்டையையும் மாற்றுத் திறனாளிகள் வைத்திருக்க வேண்டும்  என்று கூறியிருக்கிறது. இது முரண்பா டானதாக இருக்கிறது. 

இதன் காரணமாக மாற்றுத் திறனாளிகள் பல்வேறு துறைகளி லும் பயன்களை அடைவதற்காக ஒன்றிய அரசாங்கத்தின் துறை அளித்துள்ள அடையாள அட்டை போதுமானது என்கிற அம்சம், ரயில்வே துறையானது தான் அளித்துள்ள அடையாள அட் டையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதன் மூலம் தகர்ந்துவிடுகிறது. 

இவ்வாறு தனி அடையாள அட்டை கோருவதன் மூலம் ரயில்வே, 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனா ளிகள் உரிமைக ளுக்கான சட்டத்தை மீறுகிறது என்று மனுதாரர் கூறி யுள்ள விவரங்களை உயர்நீதி மன்றம் முழுமையாக கண்டுகொள் ளாமல் விட்டுவிட்டது. 

உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்  மொத்தம் உள்ள ஒன்பது பக்கங்களில் அய்ந்தரை  பக்கங்கள் ரயில்வே அளித்திடும் பல்வேறு சலுகைகளைக் குறிப்பிட்டிருக் கிறது.

சலுகைகள் என்பவை தாராள மாக அளித்துள்ள நன்கொடை எனக் கருதக்கூடாது. இவை  விளிம்பு நிலை மக்களுக்கு அரசால் அளிக்கப் பட வேண்டிய கடமையாகும். 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தன் வலுவான மகிழ்ச்சியின் மையைத் தெரிவித்திடும் அதே சமயத்தில், இதற் கெதிராக மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான மேடை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்.  -இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *