கண்ணந்தங்குடி, ஜூன் 15- கண்ணந்தங்குடி கீழை யூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்து வதன் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மூன்ட் ராக்108 (TRICHY MOON ROCK108) சார்பில் சேத மடைந்த பள்ளிக் கட்ட டங்களை சுமார் ரூ.3,30,000 செலவில் சீரமைத்து வண்ணம் தீட்டி புதுப் பித்து புதுப்பொலிவுடன் உருவாக்கி தந்த சங்க நிர்வாகிகள் 12.6.2023 அன்று காலை 10:30 மணி அளவில் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர் நிலைப்பள்ளிக்கு வருகை தந்தனர்.
அவர்களுக்கு நன்றி பாராட்டு நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற் றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் பள்ளி வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் சி.மாரிமுத்து நிகழ்விற்கு தலைமை யேற்று உரையாற்றினார் மருத்துவக் கல்லூரி மேனாள் முதலமைச்சர் டாக்டர் கலைச்செல்வி பாராட்டுரையாற்றி னார்.
திருச்சி மூன்ட்ராக் 108 தலைவர் முருகப்பா ராஜா, செயலாளர் இனியன் அமுதன், ஏரியா துணைத் தலைவர் ராமு அங்கப்பன், ஆகியோர் மூன்ட்ராக் நோக்கத்தை பற்றியும் மாணவர்களை ஊக்கப்படுத்தியும் உரையாற்றினர்.
இறுதியாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி நன்றி உரையாற்றினார்.
திருச்சி மூன்ட்ராக் 108 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பள்ளி கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில் பய னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி கல்விவளர்ச்சி குழுவை சார்ந்த திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிச்சைக்கண்ணு, ஓய்வு பெற்ற மாவட்ட காவல் துறை துணை கண்கா ணிப்பாளர் ராஜேந்தி ரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபாலன், ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப் பினர் வேணுகோபால், மேனாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவீந்திரன், ஆர்.ஏ.டி.ஜி.மகேந்திரன், அம்பிகாபதி, செந்தில் குமார், குணசேகர், ராஜேந்திரன், பெரிய சாமி, பொறியாளர் பிர பாகரன், இனியன் அவர் களின் தந்தையார் அமு தன் மற்றும் குடும்பத்தி னர் துணைத் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி மற் றும் ஆசிரியர் பெருமக் கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.