கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2023

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீட் தேர்வில் முதல் நூறு ரேங்க் எடுத்த மாணவர்களில் 75 மாணவர்கள் அய்தராபாத் நகரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனமான சிறீசைதன்யாவில் பயிற்சி எடுத்தவர்களாம்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் 2024 தேர்தலில் பொதுத் திட்டத்தை முன்னிறுத்துவது குறித்து விவாதிக் கப்படும்.. பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் தற்போது இல்லை என தகவல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு குறித்து ஆளுநர் இன்னமும் அனுமதி தராத நிலையில் 95 ஆயிரம் மாணவர்கள் பட்டங்களுக்காக காத்திருக்கும் அவலம்.

தி இந்து:

* ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்து புதிய பரிந்துரைகளுக்காக ஒன்றிய அரசின் சட்ட ஆணையம் பொதுமக்கள் மற்றும் மத  அமைப்புகளிடம் கருத்து கோரியுள்ளது. முந்தைய 21ஆவது சட்ட ஆணையம், நாட்டில் இந்த சட்டத்தில் UCC அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல என்று கூறியது நினைவு கூரத்தக்கது.

தி டெலிகிராப்:

* வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. சில பெரிய வணிகக் குழுக்களில் உள்ள தனது நண்பர்களுக்கு உதவ பிரதமர் எப்போதும் ஆர்வத் துடன் விதிகளை வளைத்து அல்லது மாற்றி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *