பகுத்தறிவாளர் கழகம் – மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
3 Min Read

‘பகுத்தறிவுத் தடத்தில் கலைஞர்’ என்ற தலைப்பில் மருத்துவர் ப.மி.யாழினி சிறப்புரை

சென்னை, ஜூன் 15- “பகுத்தறிவுத் தடத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர்” – நூற்றாண்டு சிறப்புக் கூட்டம். 10.6.2023 சனிக்கிழமை மாலை 6:30 – 8:00 மணி வரை அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடலில் நடைபெற்றது.

முனைவர் நா.சுலோச்சனா வரவேற் புரையாற்றினார். பொறியாளர் க.கரி காலன் தலைமை உரையாற்றி, பகுத் தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச் செல்வனுக்கு புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

மாநில சமூக ஊடகப் பொறுப்பாளர் தி.மு.க. மகளிர் அணி – டாக்டர் ப.மி.யாழினி ‘பகுத்தறிவுத் தடத்தில் கலைஞர்’ என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.

கலைஞர் பாடுபட்டார்

டாக்டர் ப.மி.யாழினி தமது உரை யில், பகுத்தறிவு கொண்டு சக மனிதனை மனிதனாகப் பார்க்க எண்ணி அவர் களுக்கு குடிசை மாற்று வாரியம், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம், கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிப்பு, போக்கு வரத்துதுறை அரசுடைமையாக்கப் பட்டது. மூடநம்பிக்கைக்கு எதிராக பராசக்தி படத்தில் பகுத்தறிவு கருத்துகள்  நிரம்பி இருந்ததுடன் “அம்பாள் எக் காலத்தில் பேசியது” போன்ற வசனங் கள் மூலம் அவரின் பகுத்தறிவு சிந்தனைகளை திரைப்படம் வாயிலாக வும் தெரிவித்தார்.

தமிழின் முக்கியத்துவம் உலககெங் கிலும் பரப்ப தமிழ் மொழிக்கு செம் மொழி அங்கீகாரம், தமிழ் ஆண்டு வரிசையில் திருவள்ளூவர் ஆண்டு பெயரிட்டது என்பதுடன் தை திரு நாளுக்கு முன்னுரிமை, மனோன் மணியம் பெ.சுந்தரம்பிள்ளை அவர் களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970களில் இருந்து அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது. தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என வழங் கியதுடன் இன, மொழி சார்ந்த கொள் கைகளில் எந்த தாட்சண்யமும் காட் டாது இனமான பகுத்தறிவாளராகத் திகழ்ந்தார்.

மேலும், கடவுள் என்பது ஒரு சாரா ருக்கே சொந்தம் என்பதை உடைத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா கலாம் என்ற பெரியார் கொள்கையை சட்டமாக்கி, கருவறையில் அனைவரும் நுழையவும் வாய்ப்பினை ஏற்படுத் தினார்.

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர்களுக்காக கல்வி உதவித் தொகை உயர்வு, அவர்களுக்கு விடுதி அதிகமாக திறக்கப்பட்டது. பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 31 சதவீதம் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

அனைவரும் சமம் என்பதற்காக சமத்துவபுரம் அமைத்தார். ஜாதி மறுப்புத் திருமண ஊக்குவிப்புக்காக – அவ்வாறு செய்தவர்களுக்கு ஊக்கத் தொகை என ஜாதி மறுப்புத் திருமணத்தை கவுரவப்படுத்தினார்.

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, மாவட்டம்தோறும் அரசு மருத்துவமனையுடன்கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள், பெண்க ளுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பு 30% இடஒதுக்கீடு, பெண்கள் சுய உதவிக்குழு, ஏழைப் பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக திருமண உதவித் திட்டம், கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என பெரியார் கண்ட கனவுகளை நிறைவேற்றுபவராக கலைஞர் திகழ்ந்ததாகக் கூறினார்.

வடசென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளர் பா.இராமு நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தங்கமணி, தன லட்சுமி, சு.துரைராசு, ஆ.சி.அருணகிரி, த.கு.திவாகரன், வேண்மாள் நன்னன், மீனாட்சி சுந்தரம், ச.ஜனார்த்தனம், தென்.மாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *