காலை நடைப் பயிற்சியின் போது சற்று லேசான மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய மருத்துவ ஆய்வுக்காக இன்று (21.7.2025) அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பற்றி முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவப் பரிசோதனை முடித்து பணிகளைத் தொடர்வார் என்றும் அவரது செயலாளர் தெரிவித்தார்.