முதியவர் குழந்தைகள் சென்ற காரைத் தாக்கிய காவடி யாத்திரை குண்டர்கள்
காவடியாத்திரை முடியும் வரை முழு உத்தரப் பிரதேசத்தை காவடி தூக்கும் காலிகளைத் தவிர இதரமக்கள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்று ஒரு வழியாக அறிவிக்கலாமே!
டில்லிக்கு அருகில் உள்ள கவுதம்புத்தார் நகர் மாவட்டத்திலிருந்து அரித்துவார் நோக்கிச் சென்று கொண்டிருந்த காவடிதூக்கிச்செல்லும் கூட்டம் நீண்ட நேரமாக சாலையை மறித்துகொண்டு நடந்துசென்றது, இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது கிடைத்த சிறிது இடைவெளியில் கார் ஒன்று அவர்களைக் கடந்துசெல்ல முயற்சி செய்தபோது உடனே காவடி தூக்கிச்சென்ற காவிஹிந்துத்துவ குண்டர்கள் காரைத் தாக்கினர். காரில் முதியவர் குழந்தைகள் இருந்தும் கண்டுகொள்ளாமல் காரைத் தாக்கி கார் கண்ணாடிகளை காலால் உதைத்து உடைத்தனர்.
உடைமைகளை சோதனை செய்ய முயன்ற
ராணுவ வீரரை தாக்கிய காவடியாத்திரை குண்டர்கள்
மிர்சாபூர் ரயில் நிலையத்தில் மைகளை சோதனையிடுவதற்கு மறுத்து கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்த ஹிந்துத்துவ காவிக்கும்பலை பாதுகாப்பிறகு நின்ற ராணுவ வீரர் தடுத்துள்ளார்.
இதனை அடுத்து அந்தக் கூட்டத்தினர் ராணுவ வீரரை தாக்கினர். அவரை அடித்து கீழே தள்ளி மிதித்தனர்.
ரயில் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இதர ரயில்வே ஊழியர்களும் வேடிக்கை பார்த்தனர் ஒருவர் கூட ராணுவ வீரரை வெறிபிடித்த காவடியாத்திரை கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்ற முன்வரவில்லை
‘‘இது என்ன விதமான பக்தி? பக்தி என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது எப்படி நியாயம்?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புலால் உணவு விற்கக் கூடாதாம்! உணவு விடுதிக்குள் புகுந்து
ஹிந்துத்துவா கும்பல் மிரட்டல் – உணவகம் மூடல்!
உத்தரப் பிரதேசத்தில் புலால் உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை ஹிந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தது. இந்நிலையில் நேற்று (19.7.2025) இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் ஹிந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.
ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) புலால் உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மரக்கறி மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் விளம்பரப் பலகையை நிறுவியுள்ளனர். ஆனால் தங்கள் உணவகத்திற்கு புலால் உணவு சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும், இதனால் தங்களுக்கு நட்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார். இதேபோல் மற்றொரு தனியார் புலால் உணவகத்தையும் ஹிந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை காவிக் கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.