சென்னை, ஜூலை 19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள் தமிழ் நாட்டில் போட்டி போட்டு கொண்டு முதலீடுகள் செய்து வருகின்றன. இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முதலிடத்தில் திகழ்கிறது.
இந்நிலையில், வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ‘சியட்’, தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி, திருப்பெரும் புதூரில் உள்ள தனது ஆலையை 450 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக சியட் டயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறீபெரும்புதூர் ஆலையில் ஆண்டுக்கு 70 லட்சம் டயர்கள் உற்பத்தியாகும் நிலையில், மேலும் அதிகப்படுத்த சியட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சியட் உற்பத்தி ஆலையின் இந்த விரிவாக்கம் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2027 ஆம் ஆண்டுக்குள், கார்களுக்கான உதிரிபாகங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக வும் ‘சியட்’ நிறுவனம் கூறியுள்ளது.