திருமுல்லைவாயலில் புதிய மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

viduthalai
1 Min Read

திருமுல்லைவாயல், ஜூலை 19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.07.2025) திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 2025-2026 சட்டப்பேரவை அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் 25 நகர்ப்புற சிறப்பு மருத்துவ சேவை மய்யங்கள் (poly clinic) திறந்து வைத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, விழா பேருரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஆவடி மாநகராட்சி மேயர்  ஜி.உதயகுமார், ஆணையர்  ரா.சரண்யா, துணை மேயர் எஸ்.சூரியகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பா.பிரியாராஜ், பூவிருந்தவல்லி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரபாகர், ஆவடி மாநகராட்சி நல அலுவலர் மரு.ராஜேந்திரன் மற்றும் பொது சுகாதார கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *