சென்னை, ஜூலை 19- 16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயிலுக்கான சேவை கட்டணமும் உயர்த்தப்பட உள்ள தாக ரயில்வே அறிவித்துள்ளது.
தொழிற்சாலை, குடோன் களில் இருந்து சரக்கு ரயில்களில் சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரயில்வே துறை வசூலித்து வருகிறது.
இந்த கட்டணத்தை அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ரயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கு கடந்த 14ஆம்தேதி அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி அந்த கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. சரக்கு ரயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டண உயர்வுக்கு என்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித் துள்ளது என்றும், எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவு இதில் அடங்கும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணி களை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே கடந்த 1ஆம் தேதி முதல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சரக்கு ரயில் சேவையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தையும் உயர்த்துவ தாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.