டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: ஒன்றிய அரசின் நிதி மற்றும் கல்வி உரிமைகளை மறுக்கும் நிலைப்பாட்டை எதிர்த்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப திமுக உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு நாள்” என 1967 ஜூலை 18-அய் வரலாற்று நாளாகக் குறிப்பிட்டு, தமிழர் தனித்தன்மையின் அடையாளம் என பெருமையுடன் தெரிவித்தார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி நீதிபதியின் பதவி நீக்கம் குறித்து காங்கிரஸ் ஆதரவு:
* ஜஸ்டிஸ் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி முன்வைத்ததை ஆதரித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் பதவி நீக்கம் கோரும் தீர்மானத்தில் கையெழுத்திட ஒப்புதல் தெரிவித்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாணவர்களுக்கு ஹிந்தி திணிக்கப்படின் நாங்கள் பள்ளிகளை மூடுவோம்: எம்.என்.எஸ். கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை.
* 75 வயதாகிவிட்டது என்று மோடியை ஓய்வுபெற சொல்லிவிட்டால் பாஜக 150 இடம் கூட வெல்ல முடியாது: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேயின் கருத்தால் புதிய சர்ச்சை, மூத்த தலைவர்கள் அதிருப்தி
தி ஹிந்து:
* உ.பி. காசியாபாத் – அசைவ உணவுக் கடை முற்றுகை: இந்து ரக்ஷா தளம் என்ற வலதுசாரிக் குழுவைச் சேர்ந்தவர்கள் காஜியாபாத்தில் உள்ள ஒரு கே.எஃப்.சி கடையை முற்றுகையிட்டு, இந்து மாதமான சாவான் மாதத்தில் அசைவ உணவு விற்பனையை தடை செய்ய கோரினர். அருகிலுள்ள மற்றொரு உணவகமான நசீருக்கு வெளியே இதேபோன்ற போராட்டம் நடத்தப்பட்டது, இதில் இரு நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஈபிஎஸ்-இன் அழைப்பை நிராகரித்த திமுக கூட்டணி கட்சிகள்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் அவரது கூட்டணியில் சேரும் அழைப்பை திமுகவின் கூட்டணி கட்சிகளான சிபிஅய், சிபிஎம் மற்றும் விசிக தலைவர்கள் நிராகரித்தனர், எடப்பாடியின் இரட்டை நிலை அரசியல் நிலைப்பாடு மற்றும் பாஜகவுடன் கூட்டணி குறித்து குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* என்சிஇஆர்டி வரலாறு புத்தகத்தில் ‘சமூக விரோதக்’ கருத்துகள்: வரலாற்றாளர்கள் எதிர்ப்பு “EXPLORING SOCIETY: INDIA AND BEYOND” என்ற புத்தகத்தில், ஜிஸ்யா வரி – இஸ்லாத்திற்கு மாற ஊக்கமளித்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வரலாற்றாசிரியர் ஜிதேந்திர மீனா, “அவை ஆதாரமற்ற மதவாதத் தகவல்களாகும். இதற்கு சான்றுகள் எங்கே?” எனக் கேள்வி எழுப்பினார்.
– குடந்தை கருணா