பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநருமான வேலு பிரபாகரன் (வயது 68) இன்று (18.7.2025) விடியற்காலை மறைவுற்றார் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
ஒளிப்பதிவாளராக திரைப்படத் துறையில் நுழைந்து, பிறகு இயக்குநராக மாறி பல திரைப்படங்களை எடுத்தவர். அவரது ‘புரட்சிக்காரன்’ என்ற திரைப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. நாளை மனிதன், அசுரன், ராஜாளி கடவுள், சிவன் போன்ற படங்களையும் எடுத்தவர்.
பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமானவர் என்பதால் அவர் இயக்குநராக இருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முற்போக்குச் சிந்தனைகள் முக்கிய இடம் பெறும்.
பெரியார் திடலோடும், நம்மிடத்திலும் தொடர்போடு இருந்தவர். அவரின் மறைவு திரைப்படத் துறைக்கு மட்டுமல்ல; பகுத்தறிவாளர்களுக்கும் இழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
தலைவர்
18.7.2025 திராவிடர் கழகம்