அய்தராபாத், ஜூன் 16 – பா.ஜ. க.வினர் தங்கள் கட்சிக் காக மட்டுமே உழைத்து மக்களை மதம் மற்றும் ஜாதியால் பிரித்தனர் என்று தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் கே.பி.விவேகானந்தா குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விவேகானந்தா கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு சரியான முகம் தலைவர் இல்லை என்பதை அமித் ஷாவின் வருகை தெளி வாக காட்டுகிறது. கரு நாடக தேர்தலின்போதும் அதுதான் நடந்தது. நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா கூட கருநாடகாவில் இருந்தார்கள். ஆனால் மக்கள் நம்பவில்லை. தேசிய தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த 9 ஆண் டுகளாக எங்களுக்கு ஒரு தேசிய திட்டம் கூட வழங்கப்படவில்லை. ஆனோல் ஒன்றிய அரசு நமது கிராமங்களையும், பேரூராட்சிகளையும் அங்கீகரித்து இருப்பது நமது வளர்ச்சியை காட் டுகிறது.மாநில பா.ஜ.க. வின் செயல்பாடு முற்றி லும் தோல்விய டைந்துள் ளது. அவர்கள் தங்கள் கட் சிக்காக மட்டுமே உழைத்து மக்களை மதம் மற்றும் ஜாதியால் பிரித்தனர்.
தெலங்கானா மக்கள் அதை ஒரு போதும் ஏற் றுக்கொள்ள மாட்டார்கள் கருநாடகாவில் பா. ஜ.க.வின் தவறான ஆட்சி மற்றும் ஊழலால்தான் காங்கிரஸ் ஆட்சியை பிடித் தது. இவ்வாறு கூறினார்.