பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க கோரிக்கை வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்பு பேசிய அவர், மீனவர்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றார். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய அவர், பிரதமர் இதில் நேரடியாக தலையிட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இபிஎஸ் அழைப்பை நிராகரித்த சிபிஎம்
அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வர வேண்டும் என்ற இபிஎஸ்-ன் அழைப்பை சிபிஎம் நிராகரித்துள்ளது. நேற்று வரை கம்யூனிஸ்ட்டுகளை காணோம் என்று கூறிய இபிஎஸ் இன்று அழைப்பு விடுத்திருப்பது ரத்தின கம்பள வரவேற்பு அல்ல; வஞ்சக வலை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள விசிக, இபிஎஸ்-ன் அழைப்பை நிராகரித்திருந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரித்துள்ளது.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில்
மாதர் சங்கத்தினர் மனு
மாதர் சங்கத்தினர் மனு
தனக்கு எதிராக குரல் எழுப்பிய மாதர் சங்கங்கள், வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவுக்கு ஆதரவாக ஏன் செயல்படவில்லை என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் மாதர் சங்கத்தினர் கஞ்சா அல்லது மதுபோதையில் படுத்துவிட்டார்களா எனவும் விமர்சித்தார். இந்நிலையில் தங்களை அருவறுக்கத்தக்க வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.