ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்ட வீரர் நீடாமங்கலம் ஒரத்தூர் ப.மாணிக்கம் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவுரை

1 Min Read

நீடாமங்கலம், ஜூலை 17  கடந்த 15.7.2025 அன்று காலை 11 மணி அளவில் மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் மறைந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற சுயமரியாதைச் சுடரொளி பி.மாணிக்கத்தின் படத்திறப்பும், கல்வெட்டுத்திறப்பும்  நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கல்வெட்டினையும், படத்தினையும் திறந்து வைத்து நினை வேந்தல் உரை ஆற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த், திமுக திருவாரூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் ராணிசேகர், திமுக சித்தமல்லி மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர் சோம.நடேசமணி ,

வர்த்தக சங்க தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொறுப்பாளர் பி.கந்தசாமி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவாளர்கழக .மாவட்டச் செயலாளர் தங்க.வீரமணி, மன்னை ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு,

தி இளைஞர் அணி மாவட்டத்தலைவர் கோரா.வீரத்தமிழன், கழகப் பேச்சாளர் இராமஅன்பழகன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், வடுவூர் உலக நாதன், ஆசைஒளி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நீடாமங்கலம் நகர செயலாளர்

இ. ஷாஜகான்,  கழக மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜோதி.அறிவழகன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டி, ப.க. மன்னை நகரத் தலைவர் அறிவானந்தம், ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர்.  பி.மாணிக்கத்தின் வாழ்விணையர் செல்லபாப்புவிற்கும்,  மகன்கள் மா.குருநாதன், மா.மகாலிங்கம். மா.புட்பநாதன், ஆகியோருக்கும் பொதுச் செயலாளர் ஆறுதல் கூறினார்.

நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *