திராவிடர் கழகம் சார்பில் 46 ஆவது ஆண்டாக குற்றாலம் வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10 முதல் 13 வரை நான்கு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பல்வேறு தலைப்புகளில் பெரியாரியல் பயிற்றுநர்கள் வகுப்பெடுத்தனர்.
ஜூலை 10 ஆம் நாள் வியாழக்கிழமை காலை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
முதல் நாள்:
‘பெரியார் ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் முதல் வகுப்பினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ‘பெரியாரே நமது அடையாளம்’ எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் படைப்புகள்’ எனும் தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன்ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
‘புராண இதிகாசப் புரட்டுகள்’ எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ‘தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி, ‘சமூகநீதி வரலாறு (பெரியார் காலம் வரை)’ எனும் தலைப்பில் கோ.கருணாநிதி, ‘கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்’ எனும் தலைப்பில் முனைவர் க.அன்பழகன், ‘செயற்கை நுண்ணறிவும் (AI), சமூக ஊடகங்களும்- பேச்சுப் பயிற்சி’ எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்பாக விளக்கினர்.
இரண்டாம் நாள்:
‘தமிழர்- திராவிடர் – ஆரியர்’ எனும் தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், ‘திராவிடர் இயக்க வரலாறு (நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம்)’ எனும் தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ‘சமூக நீதி வரலாறு (பெரியாருக்கு பின்’ எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், ‘பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’ எனும் தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘சமூக நீதிக்கான சவால்களும், தனியார் துறையில் இட ஒதுக்கீடும்’ எனும் தலைப்பில் முனைவர் வா.நேரு ஆகியோர் வகுப்பெடுத்தனர்..
மாலை 3 மணிக்கு பெரியார் திரைப்படம் திரையிடப்பட்டது.
‘பெரியாரே வாழ்வியல்’ என்ற தலைப்பில் வகுப்பும் கழக அமைப்பு களப்பணி பயிற்சி குறித்தும் மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் மாணவர்களுக்கு விளக்க மளித்தார்.
மூன்றாம் நாள்:
‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் சாதனைகள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் வி.சி.வில்வம், ‘திராவிடர் கழகமும்- அரசியல் சட்டமும்’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ‘தந்தை பெரியாரால் விளைந்த கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ எனும் தலைப்பில் பேராசிரியர் ந.எழிலரசன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக வகுப்பெடுத்தார்.
‘பேயாடுதல், சாமியாடுதல் அறிவியல் விளக்கம்’ எனும் தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமன், ‘பெரியாரே பெரும் தீர்வு (வாழ்வியல் அணுகுமுறை)’ எனும் தலைப்பில் உளவியலாளர் ஜெ.வெண்ணிலா, ‘ஜாதி ஒழிப்பு போரில் தந்தை பெரியார்’ எனும் தலைப்பில் பேராசிரியர் ஆ.நீலகண்டன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
பயிற்சி மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
‘தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலனா? பகுத்தறிவா? பெண் விடுதலையா?’ எனும் தலைப்பில் மூன்று அணியினருக்கும் நான்கு பேராக 12 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் நடுவராகப் பொறுப்பேற்று உரையாற்றினார்
‘இனநலனே’ எனும் அணியில், வீரப்புக ழன், சுவாதி லட்சுமி, நவீன் வள்ளல் சிகரம், வெங்கடேசன், ‘பகுத்தறிவே’ எனும் அணி யில் வென்மாறன், கனிஷ்கா, கார்த்திகா, சத்யப்பிரியன், ‘பெண் விடுதலையே’ எனும் அணியில், அறிவுச்செல்வன், நிலவெழிலன், சாதனப் பிரியா, சபி.முகமது ஆகியோர் கலந்து கொண்டு, மூன்று நாள்களில் கற்றுக்கொண்டதைப் பட்டிமன்றத்தில் எடுத்து வைத்தனர். ‘தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலனே!’ என்று தீர்ப்பளித்தார்.
பயிற்சி முகாம் சார்பில், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ் சுடர், கும்பகோணம் மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன் ஆகியோர் வழங்கிய புத்தகங்களை பட்டி மன்றத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். காட்சிப் பாடம் (பவர் பாயிண்ட்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி காட்சி மூலம் பவர் பாயிண்ட் விளக்கத்துடன் மாணவர்களிடம் வகுப்பெடுத்தார்.
நான்காம் நாள்:
‘சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி’ எனும் தலைப்பில் பேராசிரியர் எழிலரசன், ‘பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு’ எனும் தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ‘ஹிந்து- ஹிந்துத்துவா- சங்பரிவார்’ எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
நிறைவாக ‘‘கேள்வியும் – கிளத்தலும்’’ நடைபெற்றது. இதில் மாணவர்களின் அய்யங்க ளுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விடையளித்தார்.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில் 26 பெண் மாணவர்களும், 60 ஆண் மாணவர்களும் பங்கேற்றனர். இதில் இருபால் மாணவர்களில் பட்டதாரிகள் 24 பேர்.
பார்வையாளர்கள் 41 பேர் உள்பட மொத்தம் 127 பேர் பங்கேற்றனர்.
கழகப் பாடல்கள்:
பயிற்சி வகுப்பு தொடக்கத்தின் போதும், இடையிடையேயும் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மதுரை வே.செல்வம், புள்ளம்பாடி பொற்செழியன், திருச்சி ஈகைராசன் கழகப் பாடல்களைப் பாடினார்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் குழுப் பாடல்களை பாடினர்.
இடையிடையே, ஈட்டி கணேசனின் ‘மந்தி ரமா? தந்திரமா?’ எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி செய்து காட்டினார்.
மாணவர்களிடம் வினாக்கள்:
ஒவ்வொரு நாளும் நடைபெற்ற பாடத்திலி ருந்து கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடம் வினாக்களை எழுப்பினார். இதில் சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பெருவளப்பூர் சித்தார்த்தன் இயக்க நூல்களைப் பரிசாக வழங்கி ஊக்கமளித்தார்.
முகாம் சிறக்க உழைத்தவர்கள்
பெரியார் பயிற்சிப் பட்டறை ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில், தென்காசி மாவட்ட காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பி னர் இல.திருப்பதி, தென்காசி மாவட்ட தலைவர் த.வீரன், மாவட்ட செயலாளர் கை.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்
வே. முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.கோபால் பொதுக்குழு உறுப்பினர் அய்.ராமச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காப்பாளர் பால்.இராசேந்திரம், மாநில ப.க அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஒரத்தநாடு திருநாவுக்கரசு ஆகியோர் பயிற்சி முகாமுக்கான பணிகளைச் சிறப்பாக செய்தனர்.
ஒலி – ஒளி அமைப்பினை மேல மெஞ்ஞான புரம் சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.
சமையல் குழுவினர்:
கீழப்பழூர் முருகன், சுடலையாண்டி, பாஸ்கர், மாரியம்மா, முத்துலெட்சுமி ஆகி யோர் சிறப்பான உணவு ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு வழங்கினர். மதுரை சுப்பய்யா, மதுரை இராக்குதங்கம் ஆகியோர் இப்பணிகளை ஒருங்கிணைத்தனர்.
நன்கொடை வழங்கியோர்
தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனியசாமி பயிற்சிப் பட்டறை மாணவர்களின் உண வுக்கான அரிசி வழங்கினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி பயிற்சி பட்டறை நடை பெறுவதற்கு ராஜபாளையத்தில் பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்கினார்.
வள்ளல் வீகேயென் மாளிகை:
வீகேயென் மாளிகை உரிமையாளர் வீகேயென் இராஜா ஆலோசனையின் பேரில் பயிற்சிப் பட்டறை நடைபெறும் அரங்க, மாணவர்கள் தங்கும் இடங்களை மாளிகை பணியாளர் சொக்கலிங்கம், சுப்பிரமணியன், மணிக்குமார், மாரியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்து கவனித்து கொண்டனர்.
பங்கேற்ற ஓட்டுநர்கள்:
ஓட்டுநர்கள் அ.க.அருள்மணி, அருண், இராஜேந்திரன் ஆகியோர் பயிற்சி முகாம் சிறக்க பங்கேற்றனர்.
இயக்க நூல்கள் பரிசு:
பயிற்சி முகாமில் பங்கேற்று வகுப்புகளை சிறப்பாக கவனித்து நன்கு குறிப்பு எடுத்த தேர்வு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்சுடர், இயக்க நூல்களை பரிசாக வழங்கினார்.
வலைக்காட்சி குழு:
வலைக்காட்சி குழுவினர் உடுமலை வடிவேல், புகழேந்தி ஆகியோர் வலைக்காட்சி பணிகளை சிறப்பாக செய்தனர்.
புத்தக விற்பனை:
புத்தக விற்பனையாளர்கள் விமல்ராஜ், சாந்தகுமார் ஆகியோர் புத்தக விற்பனை பணியில் ஈடுபட்டனர். 4 நாள்களில் 1,78,140 ரூபாய் மதிப்பிலான நூல்களை, மாணவர்கள் 50 சதவீத கழிவு விலையில் வாங்கிச் சென்றனர்.
குறிப்பெடுத்ததில் பரிசு பெற்ற மாணவர்கள்
மாணவர்கள் கா.குகன்ராஜ், லி.தமிழ்டார்வின், ந.விஜயலட்சுமி, ம.வெண்மாறன், நா.சத்தியப் பிரியன் ஆகியோர் பயிற்சி பட்டறையில் சிறப்பாக குறிப்பெடுத்தனர். இவர்களுக்கு இயக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.
பயிற்சிப் பட்டறையில் பெற்ற பயன்கள் அனுபவங்கள் குறித்து உரையாற்றியோர்
பேரையூர் சாதனப்பிரியா, மயிலாடுதுறை யுவன் சத்யபிரியா, தேனி வெண்மாறன், ஆகியோர் பயிற்சியில் பெற்ற அனுபவங்கள், நல்லொழுக்கங்கள், கட்டுப்பாடுகள், பெரி யாரை எளிமையாக கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் குறித்தும் மனந்திறந்து பேசினர்
சிறப்பு செய்தல்
ஏற்பாட்டுக் குழுவினர், பயிற்றுநர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் வீகேயென் பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்
வீகேயென் ராஜாவுக்கு பாராட்டு சிறப்பு செய்தல்
வள்ளல் வீகேயென் எப்படி குற்றாலம் வீகேயென் மாளிகையை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடர்ந்து நடத்துவதற்கு அரங்கம், மாணவர்கள் தங்குவதற்கும் ஆண்டுதோறும் ஏற்பாடுகளை செய்து கொடுத்து சிறப்பித்தாரோ, அதே வழியில் தனது தந்தையைத் தொடர்ந்து குற்றாலம் வீகேயென் மாளிகை உரிமையாளர் கேப்டன் வீகேயென் ராஜா சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொடுத்து உபசரித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வீகேயென் ராஜாவுக்குப் பயனாடை அணிவித்து சிறப்புசெய்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், திராவிடர் மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் முனியசாமி, மாவட்ட செயலாளர் முருகன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் வீரபத்திரன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் பாண்டு, தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத்திகன், விருதுநகர் மாவட்ட தலைவர் நல்லத்தம்பி, இராஜபாளையம் மாவட்டத் தலைவர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.