சென்னை, ஜூலை 17- 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தி.மு.க., பணிகளை துவக்கி உள்ளது.
இதற்காக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. 15 நாட்களில் 1.35 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.
எனவே மக்கள் மன நிலை, தொண்டர்களின் எண்ண ஓட்டம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். உறுப்பினர் சேர்க்கையில் தகிடுதத்தம் நடப்பதைத் தடுக்கவும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும், மாவட்ட செயலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், குறைவாக சேர்த்த மாவட்டச் செயலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.