மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோ என்செபலோகிராம் (EEG) பயன்படுத்து கையில், ஆராய்ச்சி யாளர்கள் எண்ணங்களை டிகோட் செய்ய செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயன்படுத்துகின்றனர்.
மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்.
மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) பயன் படுத்துகையில், ஆராய்ச்சியாளர்கள் எண்ணங்களை டிகோட் செய்ய செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயன்படுத்துகின்றனர்.
சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTS) ஆராய்ச்சியாளர்கள் தான் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
PhD மாணவர்களான சார்லஸ் சோ, சின்-டெங் லின் மற்றும் டாக்டர் லியோங் ஆகியோரால் உருவாக்கப் பட்ட AI மாதிரிகளை கொண்டு, EEG இலிருந்து மூளை சமிக்ஞைகளை குறிப்பிட்ட வார்த்தைகளாக மொழிபெயர்கின்றனர்.
தற்போது, ஒவ்வொரு வார்த்தையையும் அங்கீ கரிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
EEG மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) ஆகியவற்றை இணைத்து சில முடிவுகளை ஆராய்ச்சி யாளர்கள் தந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், மாஸ் ஜெனரல் பிரிகாமின் (Mass General Brigham) ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் மூளைச் சிதைவை பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் திறன் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) கருவியைக் கண்டுபிடித்தனர்.
இந்த AI கருவி, EEG-ஐப் பயன்படுத்தி தூக்கத்தின் போது மூளை செயல்பாட்டில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை பகுப்பாய்வு செய்கிறது. ஒரு ஆய்வின் போது, அறிவாற்றல் வீழ்ச்சியை அனுபவித்த 85 சதவீத நபர்களை இது சரியாகக் கண்டறிந்ததும் குறிப்பிடத் தக்கது.
இதேபோன்று எலான் மஸ்க்கும், மனிதனின் மூளைக்கும் கணினிகளுக்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்தும் ”நியூராலிங்க்” என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார்.அறிவியல் வியப்பு