16.7.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தமிழ்நாடு முன்னேறிய ஓரணியாக தொடரும்; பாகுபாடு விதைக்கும் காவி திட்டம் இங்கு பலிக்காது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அழிக்கவே சர்க்கஸ் நடத்தப்படுகிறது” – எஸ்.ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்: இந்தியா-சீனா இடையிலான உறவுகள் கடந்த ஒன்பது மாதங்களில் சாதகமாக முன்னேறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ், “இந்தியாவின் வெளிநோக்கு கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முழுமையான ஒரு கோமாளித்தன நாடகம் நடத்தப்படுகிறது” என கடும் விமர்சனம் செய்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசா மாணவியின் மரணம்: பாலியல் தொந்தரவு மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை எதிர்த்து தற்கொலை செய்த மாணவியின் மரணம், ஒடிசா முழுவதும் கடும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது; எதிர்க்கட்சிகள் ஜூலை 17 அன்று வேலை நிறுத்தம் அறிவிப்பு
* வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்கள் நீக்கம், பாஜக ஆட்சி மாநிலங்களில் வங்க மொழி பேசுபவருக்கு எதிரான தாக்குதல்கள், வங்காளிகளை பங்களாதேஷுக்கு அனுப்பும் நடவடிக்கைகள், மற்றும் அசாம் அரசு அளித்த நீதிமன்ற நோட்டீசுகள் ஆகியவை அனைத்தும் ஒன்றாக இணைந்து, மம்தாவுக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு “மிகப்பெரிய ஆயுதமாக” மாறி உள்ளது; இதனைக் கொண்டு அவர் நான்காவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
தி இந்து:
* அரசு சேவைகள் வீடு தேடி வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்: விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்; மனுக்களை பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு,: ஓ.பி.சி. கூட்டத்தில் சித்தராமையா: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) அமைத்த ஓபிசி ஆலோசனைக் குழுவில், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான 75% இட ஒதுக்கீடு மற்றும் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் எனவும், நாடு முழுவதும் ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் எனவும் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தினார்.
* கன்வர் யாத்திரை உணவுக் கட்டுப்பாடு வழக்கு: கன்வர் யாத்திரை செல்லும் பாதையில் உணவு விற்பனை யாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வெளியே உள்ள பதாகைகளில் QR குறியீடு ஸ்டிக்கர் களுடன் உரிமையாளர்களின் பெயர்களையும் முக்கியமாக காட்ட வேண்டும் என்ற தேவையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, உச்சநீதி மன்றம் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அரசாங் கங்களின் பதிலைக் கோரியது.
தி டெலிகிராப்:
* சமோசா, ஜிலேபி சர்ச்சை: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, சமோசா மற்றும் ஜிலேபி தொடர்பான சர்ச்சையில் இறங்கி, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் ஆலோசனை எச்சரிக்கையை தனது அரசாங்கம் செயல்படுத்தாது என்று கூறினார். ஒன்றிய அரசு ஜிலேபி, சமோசாவை தடை செய்யவில்லை என PIB விளக்கம்.
– குடந்தை கருணா