திருச்சி, ஜூலை16– திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான கல்வி வள்ளல் காமராஜர்அவர்களின் 123ஆவது பிறந்த நாள் விழா தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் ஆகியோரின் முன்னி லையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கிய விழாவின் முதல் நிகழ்வாக 11ஆம் வகுப்பு மாணவி வெ.செ.ஜனனி விழாவிற்கு குழுமி இருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்;. காமராஜரின் படத்திற்கு பள்ளியின் மூத்த ஆசிரியைகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்;.
11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ.சனாஹமிதாவும் மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கா.நிஸ்மா காத்தூன் இருவரும் காமராஜரின் கல்வி பணி சமுதாயத் தொண்டு ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக எடுத் துக்கூறி உரை நிகழ்த்தினர்;. காமராஜர் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர் என்பதை நாடகம் மற்றும் பாடல் வழியாகவும் விளக்கி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தனர்;.
இந்நிகழ்ச்சி முழுவதை யும் 12ஆம் வகுப்பு மாணவி ஆ.கா.நிஷாந்தி தொகுத்து வழங்கினார்;. இறுதியாக 11ஆம் வகுப்பு மாணவி கி.ரோகிணி நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியை கி.மகாலெட்சுமி பட்டதாரி ஆசிரியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.