தஞ்சாவூர், ஜூலை 16– 12.07.2025 அன்று மாலை 5.00 மணியளவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்றமைக்காக சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவில் நமது வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் சு.சாந்தி கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலியிடமிருந்து மெடல், சான்றிதழ் மற்றும் பொன்னாடையும், திருவையாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் துரை.சந்திரசேகரனிடமிருநது கேடயமும் பெற்றார்.
இவ்விழாவில் மாநகர மேயர், துணை மேயர், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்
பள்ளிக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 100% தொடர் தேர்ச்சி அளித்தமைக்காக அரசு சிறப்பித்ததற்கு முதல்வர் மற்றும் ஆசிரியர் பெரு மக்களை பள்ளி தாளாளர் வாழ்த்தி மகிழ்ந்தார்.