சென்னை, ஜூலை 16 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 14.7.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், 57 மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, உரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டுகள் கொண்ட பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் (B.V.Sc. A.H) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன.
இது தவிர, திருவள்ளூர் மாவட் டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் (B.Tech) 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 20 இடங்களும் இருக்கின்றன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு பி.டெக் 40 இடங்களும் உள்ளன. இந்த மூன்று பி.டெக் படிப் புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்த ஆண்டு, பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்புக்கு 20,516 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 5,028 பேரும் என மொத்தம் 25,544 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, தரவரிசைப் பட்டியல் ttps://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் 14.7.2025 அன்று வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியல்
பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பு: 57 பேர் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனர். வயது உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.திவ்யா, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.கமலி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.இ.அம்தா மெகதாப் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பி.டெக் படிப்புகள்: கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் எம்.பார்கவி, ஆர்.பிரவீனா, பி.கார்த்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு
பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்களும், பி.டெக் படிப்புகளில் 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பு (அரசுப் பள்ளி): கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வி.தாரணி முதலிடத்தைப் பிடித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜி.அன்புமணி இரண்டாம் இடத்தையும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பி.எம்.காருண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பி.டெக் படிப்புகள் (அரசுப் பள்ளி): கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி டி.சந்தானலட்சுமி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் பி.சிந்துஜா இரண்டாம் இடத்தையும், ஆர்.சாரதி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இணையவழியிலும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 14.7.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், 57 மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்துள்ளனர்.