கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்தி லிருந்து நேற்று (12.7.2025) 2,000-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குழந்தைகள் அலைபேசி பார்க்கிறார்களா? எச்சரிக்கை
சில வீடுகளில் குழந்தைகளின் விளையாட்டு சாதனமாக தற்போதுள்ள அலைபேசி உள்ளது. பெற்றோர்களும் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால், இதுபோல அலைபேசியை தொடர்ந்து பார்க்கும் குழந்தைகளின் மனநிலை மற்ற குழந்தை களுடன் ஒப்பிடுகையில் அதிகம் மாறுபடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 13-17 வயதுடைய 10,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆத்திரம், கோபம், எரிச்சல் அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. எச்சரிக்கை!
* சங்கரன்கோயிலில் ஏவிகே மகளிர் கல்லூரி தொடக்க விழா நாளை (14.7.2025) நடைபெறுகிறது.
* நிலைய மேலாளர்களின் அனுமதி இன்றி ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
* எச்சரிக்கை! ஆலங்குளத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை அடைந்த இளம் பெண் தற்கொலை நான்கு குழந்தைகள் பரிதவிப்பு!