புராணக் கட்டுக்கதைக் கதாப்பாத்திரங்களுக்கு சிலையாம்! வரி செலுத்தும் மக்களின் தேவைகளுக்கோ உலையாம்!

viduthalai

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பூங்காவில், 51 அடி உயரமுள்ள ராமன் மற்றும் நிஷாத்ராஜ் ஆகியோரின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

யார் இந்த நிஷாத்ராஜ்?

புராணங்களின்படி, நிஷாத்ராஜ் ராமனின் நண்பராகவும் விருந்தினராகவும் இருந்தார், மேலும் அவர்  தனது தாயின் கட்டளைப்படி நாட்டைவிட்டு வெளியேறும் போது ஆற்றைக் கடக்க உதவினார். இது வால்மிகி ராமாயணத்தில் உள்ளது

இதற்காக ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிலைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சிலைக்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது எதிர்கால சந்ததியினர் சிலைகளாக இருப்பவர்களின் பணியை அறிந்துகொள்ளவும் அவர்கள் காட்டியபாதையில் சென்று சமத்துவம், சமூகநீதி,  மனித உரிமைகள் போன்றவற்றை நிலைநிறுத்தவும் அச்சிலைகள் ஊக்கசக்தியாக உள்ளது.  ஆனால் கற்பனைக் கதாப்பாத்திரங்களுக்காக பல கோடிகளில் செலவு செய்யும் அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்திற்காக என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.

பல ஆண்டுகளாகவே தென் மாநிலங்கள் செலுத்தும் வரிப்பணம், வட மாநிலங்களின் சிலைகள் போன்ற ஆடம்பரமான கட்டுமானங்களுக்கே திருப்பி விடப்படுகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட 51 அடி உயர ராமன்-நிஷாத்ராஜ் சிலை போன்ற பிரமாண்ட திட்டங்கள் இந்த விவாதத்தை மேலும் தூண்டியுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் செல்லும் வரி வருவாயானது, நிட்டி ஆயோக்கின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்த நிதிப் பகிர்வு, மாநிலத்தின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் இடைவெளி, வரி வசூல் திறன் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா போன்றவை பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதோடு, அதிக வரி வருவாயையும் ஒன்றிய அரசுக்கு அளிக்கின்றன.

ஆனால், நிதி ஆணையத்தின் பகிர்வு சூத்திரத்தின்படி, மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கிறது.

இதன் காரணமாக, தென் மாநிலங்கள் தாங்கள் செலுத்தும் வரிப் பணத்தில் ஒரு சிறு பகுதியே தங்களுக்குத் திரும்புவதாகவும், பெரும் பகுதி வட மாநிலங்களுக்குச் செல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

இந்த நிதி, சாலைகள், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், சிலைகள் போன்ற உற்பத்தி அல்லாத திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது

எடுத்துக்காட்டாக, வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சராயு நதியின் நடுவே 447 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ராமன் சிலை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இத்தகைய திட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் ஆடம்பரத்திற்காக விரயமாகிறது. இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒருபுறம் அதிக வரி செலுத்தும் மாநிலங்கள் தங்கள் பங்கிற்கான பலனைப் பெறாமல் இருப்பாது விவாதப் பொருளாகி உள்ளது.

சிறப்புக் கட்டுரை, ஞாயிறு மலர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *