நூறாண்டுகளுக்கு முன்பே சமூகநீதியை நிலைநாட்டியவர்   பனகல் அரசர்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 10 சமூகநீதி நமது உரிமை என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே வழிவகுத்த சமூகநீதி நாயகர் பனகல் அரசர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்;

‘ரிசர்வேசன் அவர் ரைட்ஸ்’ என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே ‘கம்யூனல் ஜி.ஓ.’ மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகர் பனகல்அரசர்.

திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடந்த குடமுழுக்கு போல 3000 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறது, தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பாரிடமும் சிக்காமல் முறையாக நிர்வகிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கெல்லாம் அன்றே இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றி விதையூன்றியவர்,

ஆதி திராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரர், நீதிக்கட்சியின் நீட்சியாக, எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் நமது திராவிட மாடல் அரசு சாதிக்க அடித்தளமிட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவர் பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *