நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஒருவர் பலி

Viduthalai
3 Min Read

28 பேரைக் காணவில்லை மலேரியா நோயைக் குணப்படுத்தும் மருந்து குழந்தைகளுக்காக மலேரியா நோயைக் குணப்படுத்தும் மருந்து ஆப்பிரிக்காவில் முதல் முதலாக அறிமுகம்

டர்பன், ஜுலை 9-  மலேரியாவிற்கான சிகிச்சை முறை இதுவரை பெரியவர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் முதல் முறையாக ஆப்பிரிக்கநாடுகளில் குழந்தைகளுக்கான மலேரியா குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது

உலகில் மிகவும் அதிகமான மக்களைப் பாதிக்கும் நோய்களில் முதன்மையானதாக கருதப்படுவது கொசுவினால் பரவும் மலேரியா நோய் ஆகும்

2023 ஆம் ஆண்டில், மலேரியாவால் உலகம் முழுவதும் சுமார் 5 கோடியே 97 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 75% பேர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய்க்கான சிகிச்சை முறையில் பயன்படுத் தப்படும் மருந்துகள் இதுவரை 17 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே தகுதியான மருந்தாக இருந்து வந்தது.  இந்த நிலையில் ஆப்பிரிக்க கூட்டமைப்பின் உதவியோடு இயங்கும் மருத்துவ ஆய்வு நிறுவனம்  நவ்ரிட்டீஸ் குழந்தைகளுக்கான மலேரியா நோயை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.  இந்த புதிய மருந்து, மலேரியாவால் பாதிக்கப்படும் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளுக்கான இந்த மலேரியா சிகிச்சை முறை  உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருந்து சில வாரங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி ஆப்பிரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை, குழந்தைகளுக்கு மலேரியா சிகிச்சைக்கு பெரியவர்களுக்கான மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்பதால், புதிய மருந்து நிபுணர்களால் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

காட்மாண்டு, ஜூலை 9- நேபாள நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், 28 பேரைக் காணவில்லை என நேபாள பேரிடர் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் நேபாள குடிமக்கள் மட்டுமின்றி  இந்தியர்களும் இருக்கலாம் என்று நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக  சீனா நேபாள எல்லைப் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.  ஆனால், புவி வெப்பயமயமாதலால் இந்த பேரழிவுகளின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உயர்ந்துவரும் வெப்பநிலை மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக பருவமழைக்காலங்களில் பெரும் பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் விளைவு

அமெரிக்க விமான நிலையங்களில் பயனிகளின்
காலணிகளை அகற்றும் நடைமுறை நீக்கம்

நியூ ஜெர்சி, ஜூலை 9-  அமெரிக்க விமான நிலையங் களில் பயணிகளின் பாதுகாப்புச் சோதனையின்போது காலணிகளை அகற்றும் கட்டாயம் இனி இல்லை என அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிரிஸ்டி நோயம்அறிவித்துள்ளார். இந்த மாற்றம் ஜூலை 8 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை, அமெரிக்க விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பயணிகள் காலணிகளை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை, 2001 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ரேட் என்பவர் தனது காலணிகளில் சிறிய அளவிலான வெடிகுண்டை மறைத்து வைத்து சிக்கிய சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, நவீன ஆய்வுக்கருவிகளின் வருகையால் உடலில் எந்த ஒரு செயற்கைப் பொருள் இருந்தாலும் துல்லியமாகக் காட்டிவிடும் தொழில்நுட்பம் வந்து விட்டதால் காலணிகளை அகற்றும் முறை ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புச் சோதனைகள் சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுவதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *