கிருட்டினகிரி, ஜூலை9- காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி அவர்கள் (வயது 84) 07/07/2025-அன்று இரவு வீரமலையில் இயற்கை எய்தினார்.
தகவலறிந்து கிருட்டி னகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 8.7.2025 மதியம் 12.30 மணியளவில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக் குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் வே.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இரா சேந்திரபாபு, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, அகரம் நா.சதீஷ், மூர்த்தி, பையூர் பரத் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தோழர் களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். அன்னாரது தோட்டத்தில் மாலை 4.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.