எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன், கா.அன்பரசன், கா.ஆசைத்தம்பி ஆகியோரின் தாயாருமாகிய கா.சாரதா அம்மாள் (வயது 74) நேற்று (7.7.2025) இரவு 11 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி மற்றும் திருவொற்றியூர் மாவட்டக் கழகத் தோழர்கள் கு.மணிகாளியப்பனுக்கு ஆறுதல் தெரிவித்து அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதி நிகழ்வு இன்று (8.7.2025) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.