டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரில் வாக்காளர் சரிபார்ப்பு குறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாட்னாவில் பேரணி; ராகுல், தேஜஸ்வி பங்கேற்க முடிவு.
* பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் 10ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
* நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொதுமக்கள் சுயமாக விவரங்களை பதிவு செய்ய தனி வலை பக்கம்
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அஜித் குமார் காவல் மரணம் குறித்து விசாரிக்க சி.பி.அய்.க்கு வழக்கை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
* தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனிமேல் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
*அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 20% கூடுதல் இடம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு நாளை நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம்: 25 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக மக்களையும், காங்கிரஸ் தலைவர்களையும் மிரட்ட முயற்சிக்கிறது; தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: சத்தீஸ்கரில் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும், தொழிலதிபர்கள் ஆதரவுடன் நில அபகரிப்பு நடப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.
தி இந்து:
* பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மீது நடவடிக்கை எடு: சிபிஅய் சமீபத்தில் கண்டுபிடித்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மற்றும் இந்திய மருந்தக கவுன்சில் (பிசிஅய்) ஆகியவற்றில் நடந்த மிகப்பெரிய லஞ்ச ஊழலுக்கு பாஜக தலைவரும், ஒன்றிய சுகாதார அமைச்சருமான ஜே.பி. நட்டா பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை.
* மகாராட்டிரா அரசு அமைத்த மும்மொழி ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு: மகாராட்டிரா அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கையை செயல்படுத்துவதை ஆய்வு செய்ய அமைத்த நரேந்திர ஜாதவ் குழுவிற்கு எதிராக மொழியியல் குழுக்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் எதிர்ப்பு. நடிகர்கள் சுமீத் ராகவன் மற்றும் சின்மயி சுமீத் ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் ஆசாத் மைதானத்தில் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். “பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூசே பதவி விலகக் கோரி குறைந்தது 25 அமைப்புகள் போராட்டத்தை ஆதரித்தன,” என்று மராத்தி ஷாலா சன்ஸ்தாவைச் சேர்ந்த சுஷில் ஷெஜுலே பேட்டி.
– குடந்தை கருணா