ராமநாதபுரம், ஜூலை.8- பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல் சொந்த ஊரில் காவல்துறை மரி யாதையுடன் அடக்கம் செய் யப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் மரியாதை செலுத்தினார்.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
90 வயதான மூத்த தமிழ் அறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சென்னையில் மரணம் அடைந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர். நெஞ்சத்தோட்டம், அய்யப்பன் பாமாலை, தமிழ்முழக்கம், தாய் மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ள வா.மு.சேதுராமன் திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சென்னையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மரியாதை செலுத்தினார்.
அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது. அதன்படி ஆண்டநாயகபுரம் கிராமத்துக்கு கொண்ட வரப்பட்ட அவரது உடலுக்கு நேற்று (7.7.2025) பிற்பகல் 3 மணிக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
காவல்துறை மரியாதை
அரசு சார்பில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், முதுகுளத்தூர் கோட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஆண்டநாயகபுரம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வா.மு.சேதுராமனின் மகன்கள் திருவள்ளுவர், கவியரசன், ஆண்டவர், தமிழ் மணிகண்டன் இறுதி நிகழ்வுகளை செய்தனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் மரியாதையுடன், 30 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் நடந்தது.