தஞ்சை, ஜூலை 05 கும்ப கோணத்தில் கலைஞா் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழ்நாடு ஆளுநா் கால தாமதம் செய்கிறார் என்றார் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் தெரிவித்ததாவது: ‘‘கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக இடம் தோ்வு செய் யப்பட்டுள்ளது. நிரந்தரக் கட்ட டங்கள் கட்ட 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான கோப்புகள் மாவட்ட ஆட்சியா் மூலம் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால் இப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட தமிழ்நாடு ஆளுநா் தாமதப்படுத்துகிறார். இதுதொடா்பாக அவரைச் சந்திக்க நேரம் கேட்ட நிலையில், இதுவரை ஆளுநா் எங்களை அழைக்கவில்லை. அவா் அழைக்கும் நேரத்தில் கலைஞா் பல்கலைக்கழகத்தின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி, அனுமதி பெற முயற்சிப்போம்.
அவா் விரைவில் அழைக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவ டிக்கை எடுப்போம் என முதலமைச்சர் பேசியதற்கான அா்த்தத்தை ஆளுநா் புரிந்து கொண்டு, அனுமதி வழங்குவாா் அல்லது பேச அழைப்பாா் என எதிா்பாா்க் கிறோம்.
கலைஞா் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநா் அனுமதி தர மறுப்பது, மாணவா்களின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் செயல் என்பதை நாடறியும். உயா் கல்வித் துறையில் மாணவா்கள் சோ்க்கை விகிதத்தை அதிகப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனைப்படி நிகழாண்டு 25 சதவீதத்துக்கும் அதிகமாக கல்லுாரிகளில் மாணவா்களைச் சோ்க்க வழி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 64 கல்லுாரிகளில் இரண்டாவது ஷிப்ட் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு, மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல கல்லுாரிகளில் முதுகலைப் பாடப்பிரிவுகளிலும் மாணவா்கள் எண்ணிக்கை உயா்த்தப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் உருவாக் கப்பட்டுள்ளன. இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் கல்லூரிகளில் கூடுதல் சோ்க்கை தொடா்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டுள்ளோம். அதன்படி ஓரிரு நாள்களில் கூடுதல் மாணவா்கள் சோ்க்கையை உறுதி செய்துவிடுவோம்’’ என்றாா் அமைச்சா்.