சேலம், ஜூலை 5- பெரியார் பெருந்தொண்டர் தோழர் கூ. மாதேஷ்வரனின் தாயார் கூ. லட்சுமி அம்மாள் 03-07-2025 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
வீரவணக்கம்
மறைவு தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட கழகத்தின் சார் பாக 04-07-2025 அன்று மதியம் 1:00 மணி அளவில் சேலம் அயோத் தியாபட்டிணத்தில் உள்ள அவர் வீட்டில் தோழர்கள் அனைவரும் கூடி இரங்கலை தெரிவித்து வீர வணக்கத்தையும் செலுத்தினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், சேலம் மாவட்ட காப்பாளர் கி. ஜவகர், மேட்டூர் மாவட்ட காப்பாளர் பழனி புள்ளையண்ணன், மேட்டூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணி,மேட்டூர் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் பெ.சவுந்திரராஜன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன், அ.ச.இளவழகன், ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ. சேகர், சேலம் மாநகர செயலாளர் ச.வெ. இராவண பூபதி, சேலம் மாவட்ட துணை செயலாளர் அ.இ.தமிழர் தலைவர் , மகளிர் அணி தலைவர் சுஜாதா தமிழ்செல்வன், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ.பரமசிவம், சூரமங்கலம் பகுதி செயலாளர் போலீஸ் ராஜூ,தாதகாபட்டி பகுதி தலைவர் மூணாங்கரடு சரவணன்,
அம்மாப்பேட்டை பகுதி செயலாளர் சு.இமயவரம்பன், என்.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.