சென்னை, ஜூலை.4- கோயம் பேடு-பட்டாபிராம் இடையே அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழ் நாட்டின் அரசு ஒப்புதல் வழங்கி யதைதொடர்ந்து ஒன்றிய அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு- – பட்டாபிராம்
சென்னையில், மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், கோயம்பேடு – பட்டா பிராம் இடையே நீட் டிக்க முடிவு செய்யப்பட்டு பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக, கோயம்பேடு-பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு ரூ.9 ஆயிரத்து 928.33 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டு இருந்தது
இத்திட்டத்துக்கு ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புக்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித் துள்ளது. மொத்தம் 21.76 கிலோ மீட்டர் துாரம் கொண்ட இந்த வழித்தடம், கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளி வட்ட சாலையை இணைக்கும்.
19 ரயில் நிலையங்கள்
இந்த வழித்தடத்தில், கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட் ஜங்சன், வாவின் முதல் மெயின் ரோடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜ், டன்லப், அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரெயில் நிலையம், கஸ் தூரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டாபிராம், வெளிவட்ட சாலை ஆகிய 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இதற்கான முறையான அனுமதிக்காக திட்ட அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்க பெற்ற உடன் கோயம்பேடு -பட்டாபிராம் இடையே ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.