அந்தோ பாவம்!
காவல்துறையினரின் அத்துமீறலால் ஒரு உயிர் பறிபோனதே என்ற சோகத்தில் அனைவரும் இருக்கும் போது பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் பார்ப்பனியக் கூட்டம் ‘‘அய்யோ, முதலமைச்சர் நேரடியாக பேசி பிரச்சினையை முடித்துவிட்டாரே. இதை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே’’ என்று கவலை கொள்வார்கள்.
எஸ்.எஸ். அய்யங்கார் என்ற நபர் சமூகவலைதளத்தில் எழுதும் போது ‘‘முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத் தினரோடு பேசி இறந்துபோன நபரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டு எளிதாக பிரச்சினையை கையாண்டு சுமூகமாக முடித்துவிட்டார். நாம் ஒரு லட்டுபோன்ற அரசியல் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டோம்’’ என்று எழுதி உள்ளார்.