ஆவடி, ஜூலை 2- ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 29.6.2025 அன்று காலை 11-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகை இரண்டாம் தளத்தில் ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் சி.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக மகளிரணி மாநில துணைச்செயலாளர் இறைவி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை,பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கழக வளர்ச்சிக்கு மகளிர் பங்கு மற்றும் செயல் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினர்.பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பெரியார் உலகத் திற்கு சென்னை மண்ட லத்திற்குட்பட்ட மற்ற மாவட்டங்களை விட அதிக அளவில் நிதி திரட்டி தருவது.
மகளிர் அணி மகளிர் பாசறையின் தனித் துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக சீருடையுடன் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது.
அக்டோபர் மாதம் மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு குடும்பத்தோடு கலந்து கொள்வது.
மகளிர் தோழர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அறிவுச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக மகளிர் மூலம் புத்தாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி மகளிரணியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்வில் கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி,திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை, அம்பத் தூர் நதியா, ஆவடி எல்லம் மாள், மதுரவாயல் லலிதா, அயப்பாக்கம் புவனேசுவரி, ஆவடி நந்தினி,கனிமொழி, பெரியார் பிஞ்சு இளந் தென்றல் மணியம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் சோ.ராதிகா நன்றி கூறினார்.