- “பல கோவில்களில் சட்டம் – ஒழுங்குப் பிரச் சினை எழக் காரணமே முதல் மரியாதை தான். இது போன்ற மரபுகள் சமத்துவத்துக்கு எதிரானவை. கோவில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்” ஈரோடு மாவட்டம் பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவில் மகா பெரிய குண்டம் விழாவில் முதல் மரியாதை வழங்கக் கோரி தேவராஜ் என்பவர் தொடுத்த வழக்கை முடித்துவைத்து (27.6.2025) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்.
- தனிமனித உரிமையைப் பாதிக்கும் வகையில், அவசியமின்றி, தன்னிச்சையாக முன்னெச்சரிக்கைக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக சிறையில் போபால் மத்திய அடைக்கப்பட்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவரை விடுவிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் உஜ்ஜல் பூஜ்யன், வினோத் சந்திரன் அமர்வு ஆணை. முன்னெச்சரிக்கைக் கைதுகள் தொடர்பாக விரிவான தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
- கடை விளம்பரம் அச்சிடப்பட்டிருந்த பைக்கு 20 ரூபாய் வசூல் செய்தது தவறு. பாளையங்கோட்டை ராம் லாலா ஸ்வீட் நிறுவனத்தின் செயலுக்கு ரூ.15,020 தண்டம் விதித்து, (மன உளைச்சலுக்கு ரூ.10000 வழக்குச் செலவுக்கு ரூ.5000, பைக்கு ரூ.20) நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் ஆணை!
வழக்குமன்றத் துளிகள்…
Leave a Comment