- பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெண்களுக்குச் சொத்துரிமை, கலியாண உரிமை கலியாண ரத்து, விதவை மணம் முதலாகியவைகளை அமலுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியமென்றும், அதற்கேற்ற சட்டசம்பந்தமான காரியமும் செய்யப்பட வேண்டும் என்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
பிரேரேபித்தவர்: இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மாள்,
ஆமோதித்தவர்: கே.எம். பாலசுப்ரமணியம் பி.ஏ.பி.எல்.,
- தலைச்சங்கத்தை ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமாய் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
நமதியக்கத்தை அகில இந்திய இயக்கமாக் குவதற்கும், நமது இயக்கக் கொள்கைகளை அகில இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியும் ஓர் ஆங்கில வாரப்பத்திரிகையை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமாய் தீர்மானிக்கிறது.
பிரேரேபித்தவர்: ப.ஜீவானந்தம்,
ஆமோதித்தவர்: பி.சிதம்பரம் பி.ஏ., பி. எல்.,
- (a) ரயில்வே , முனிசிபாலிட்டி முதலிய எல்லைகளில் லைசென்ஸ் பெற்று ஜாதி வித்தியாசத்தைக் காண்பிக்கக் கூடியவாறு மக்களுக்குள் பார்ப்பனருக்கு என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு என்றும் தனித்தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்கும் சாப்பாடு, காபி கிளப்புகளுக்கு இனிமேல் ரயில்வே போர்டாரும், முனிசிபாலிட்டியாரும் லைசென்ஸ் கொடுக்காமல் இருக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன் இதற்கு வேண்டிய சட்டத்தை இயற்ற சட்டசபை அங்கத்தினர்கள் ஊக்கமுடன் சட்டமாக்கி அமலுக்குக் கொண்டுவரக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
(b) மேற்கண்ட சமத்துவக் கொள்கையைக் கையாளும் மதுரை கோவப்பரேட்டிவ் ரெஸ்டாரண்டு உணவு சாலை லிமிடெட்டில் பங்கு எடுத்துக்கொள்ளவும், சொசைட்டி சாப்பாட்டை ஆதரிக்கவும் இம்மகாநாடு சிபாரிசு செய்கிறது.
பிரேரேபித்தவர்: ராமசுப்ரமணியம்,
ஆமோதித்தவர்: மதுரை நாராயணன் எம்.ஏ.பி.எல்.
- இராமநாதபுரம் ஜில்லாதேவகோட்டை டிவிஷனில் உள்ள ஆதிதிராவிடர்களின் துயரங்கள் சம்பந்தமாய் சென்னை சட்டசபையில் 4.8.31ல் நிறைவேற்றி இருக்கும் தீர்மானப்படி விசாரணைக்கமிட்டி ஒன்று சீக்கிரம் நியமிக்கும்படி சென்னை கவர்ன் மெண்டாரை இந்த மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
- சர்க்கார் விடுமுறை என்று பண்டிகை களைப் பிரதானமாய் வைத்து லீவுகள் கொடுப்பது என்பது ஒரு வகையில் மூடப்பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாய் இருப்பதால் சர்க்காரார் அந்த வழக்கத்தை விட்டுவிட வேண்டு மென்றும் அவசிய மிருப்பவர்கள் தனி லீவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
அக்கிராசனர்.
சுயமரியாதை சங்க நிர்வாகக்
கமிட்டி அங்கத்தினர்கள்.
ஆர்.கே. சண்முகம் பி. ஏ., பி.எல்., எம்.எல்.ஏ. தலைவர்.
ஊ.பு.அ. சௌந்திரபாண்டியன் எம்.எல்.சி, ஈ.வெ.இராமசாமி உபதலை வர்கள்.
எஸ். இராமநாதன் எம்.ஏ. பி.எல்., காரியதரிசி.
வை. சு. சண்முகம் பாங்கர் பொக்கிஷதார்.
அங்கத்தினர்கள்.
திருவாளர்கள் பி.சிதம்பரம் பி.ஏ., பி.எல்., நாகர்கோவில் எஸ். இராமச் சந்திரன் பி.ஏ. பி.எல்., சிவகங்கை. இந்திராணி பாலசுப்ரமணியம் இராணிப் பேட்டை. எஸ். நீலாவதி அமராவதி புதூர். வி.வி. இராமசாமி வியாபாரி விருது நகர். கே.ஏ.பி. விஸ்வநாதம் திருச்சி. சொ. முருகப்பா, காரைக்குடி. சி. நடராஜன் மாயவரம். சாமிசிதம்பரனார் திருவாரூர். கே.வி. அழகிரிசாமி மதுரை. டி.பி. சோமசுந்திரம் பி.ஏ., பி.எல்., எம்.டி.பி. திருச்சி. என் சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. சென்னை. வி. ராஜ மாணிக்கம் வியாபாரி தாலூகா போர்டு பிரசிடெண்ட் சேலம்.
பிரேரேபித்தவர்: ஈ.வெ.இராமசாமி.